செவ்வாய், 12 மார்ச், 2013

பாப்புலரான ஆண்ட்ராயிட் அப்ளிகேஷன்கள்.


பாப்புலரான ஆண்ட்ராயிட் அப்ளிகேஷன்கள்.
கூகுள் ப்ளேஸ்டோரில் கொட்டிக்கிடக்கும் சில பிரபலமான அப்ளிகேஷன்கள்

IRCTC Mobile App

This application is for booking your train tickets in Indian Railways. This app uses network connection for contacting the server. You can book both tatkal and general tickets through this app.
ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்திட.








Indian Train Status

Quick and easy access to live running train status, along with train nos, time table, station codes, arriving trains and PNR Status Enquiry for Indian Railways.
ரயில்களின் வருகை,புறப்பாடு,மற்றும் ரயில்வே கால அட்டவணை அறிய






NewsHunt : India News | Jobs

NewsHunt, India's #1 mobile newspaper app brings together the News from 75+ regional newspapers, and the best Jobs from India.
தமிழ் மற்றும் பன்மொழி செய்திகள் ஒரே இடத்தில்!




Cricbuzz Cricket Scores & News

A swash-buckling century from Sachin Tendulkar, or a game changing hat-trick from Lasith Malinga; Chasing down a total of 434 or bowling a team out for less than 50 - never miss out on anything spectacular that happens on the cricket field. 
இது கிரிக்கெட் ரசிகர்களுக்கானது!



 

MP3 Cutter

Cut the best part of your MP3 song and use it as your ringtone.

The cut results are stored in "sdcard/media/audio/".
ரிங் டோனுக்கு அலைய தேவை இல்லை!நீங்களே பாடல்களை வெட்டிக்கொள்ளலாம்!




சனி, 9 மார்ச், 2013

ஆண்ட்ராய்டில் தமிழ் - எழுத & படிக்க.




ஆண்ட்ராய்ட் போன்கள் இப்போது நம்மிடையே முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் தமிழ் தெரிந்தவர்களுக்கான முக்கிய தேவை "ஆண்ட்ராய்டில் தமிழில் எழுதுவதும், தமிழ் எழுத்துக்களை படிப்பதும்" தான்.

ஆண்ட்ராய்டில் தமிழ் படிக்க:

ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சான்ட்விச் (Android 4.0 IceCream Sandwich) பதிப்பிலிருந்து தமிழ் எழுத்துக்களை மொபைலில் எந்த மாற்றமும் செய்யாமலேயே படிக்கலாம். 

அதற்கு முந்தைய பதிப்பான Gingerbread 2.3.6-ஆக இருந்தால், ப்ரவ்சர் Settingபகுதியில் Language என்ற இடத்தில் "Auto-Detect" என்று மாற்றினால் ப்ரவ்சரில் மட்டும் தமிழ் தளங்களை படிக்கலாம்.

ஆண்ட்ராய்ட் எந்த பதிப்பாக இருந்தாலும் Opera Mini உலவியில் தமிழ் எழுத்துக்களை படிக்கலாம். அதற்கு நீங்கள் பின்வரும் மாற்றத்தை செய்ய வேண்டும்.




Opera Mini உலவிக்கு சென்று about:config என்று டைப் செய்து Go என்பதை க்ளிக் செய்யுங்கள்.


அங்கு Use bitmap fonts for complex scripts என்ற இடத்தில் Yes என்பதை தேர்வு செய்து Save என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு தமிழ் தளங்களை  பார்க்கலாம்.

கவனிக்க: ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சான்ட்விச் பதிப்பாக இருந்தாலும் பேஸ்புக் உள்ளிட்ட சில அப்ளிகேசன்களில் தமிழ் சரியாக தெரியாமல் இருக்கலாம். அதற்கு அந்த அப்ளிகேசன் தான் காரணம். அதை நம்மால் சரி செய்ய இயலாது.

ஆண்ட்ராய்டில் தமிழில் எழுத:

ஆண்ட்ராய்டில் தமிழில் எழுத பல அப்ளிகேசன்கள் இருக்கின்றன. அவற்றில் சில,

Tamil Unicode Keyboard (KM Tamil ;மற்றும்  tamilvisai  (இது தான் நான் பயன்படுத்துகிறேன்)

Tamilvisai

இன்னும் நிறைய அப்ளிகேசன்கள் இருக்கின்றன. ஆனால் அவைகள் பாதுகாப்பானவைகள் அல்ல. காரணம் மேலே சொன்ன இரண்டு அப்ளிகேசன்களையும் பயன்படுத்த எந்த அனுமதியும் (Permission) கேட்காது. ஆனால் மற்ற அப்ளிகேசன்கள் தேவையில்லாமல் பல அனுமதிகள் நம்மிடம் கேட்கும். 


இந்த அப்ளிகேஷனை நிறுவிய பிறகு,  ஆண்ட்ராய்டில் Settings => Language & inputபகுதிக்கு சென்று, அங்கே Keyboard & input methods என்ற இடத்தில் இந்த அப்ளிகேஷனை மறக்காமல்  டிக் செய்ய வேண்டும்.


பிறகு மொபைலில் நீங்கள் எழுதும் போது திரையின் மேலே Select Input என்று இருப்பதை கீழே Swipe செய்து அதில் நீங்கள் நிறுவியுள்ள அப்ளிகேஷனை தேர்வு செய்ய வேண்டும்.

மீண்டும் இது போன்றே மொபைல் கீபோர்டுக்கு மாறிக்கொள்ளலாம்.

கவனிக்க: இன்டர்நெட் இணைப்பின் அனுமதி கேட்கும் தட்டச்சு அப்ளிகேசன்களால் நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்களை சேகரிக்க முடியும்.

வேறு ஏதும் சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.


இன்னும் வரும் ....

அன்புடன் மாரிமுத்து 

சனி, 16 பிப்ரவரி, 2013

பேட்டரி விரைவில் விரயமாவதை தடுக்க சில டிப்ஸ்

ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் அதிகமானவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை மொபைலின் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடுவதுதான்.
. பொதுவாக அதிக வசதிகள் கொண்ட (ஸ்மார்ட்)ஆன்ட்ராய்ட் மொபைல்கள் அனைத்தும் எதிர்கொள்ளும் பிரச்சனை இது. 
நம்மால் இயன்றவரை பேட்டரி பயன்பாட்டை குறைத்து அதிக நேரம் நீட்டிக்க செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

முதலில் உங்கள் மொபைலின் பாட்டரி பயன்பாடு எவ்வளவு என்று பாருங்கள்!

எந்த அப்ப்ளிகேசன் அதிகம் மின்சாரம் எடுத்துக்கொள்கிறது என்று 
தெரிந்து கொள்ளலாம்.


பேட்டரி சார்ஜை அதிகப்படுத்த பொதுவான ஐந்து வழிகள்:


ஓன்று. 
டிஸ்ப்ளே ஒளிரும் நேரத்தை குறைத்திடுங்கள்.

இரண்டு.
லைவ் வால் பேப்பரை தூக்கிடுங்கள்!

மூன்று 
தேவைப்படாத நேரங்களில் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை நிறுத்திவிடுங்கள். இவைகள் எப்போதும் On செய்திருந்தால் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.



நான்கு 

இதைப்போல் வத வத என்று அப்ளிகேஷன்களை ஹோம் ஸ்கிரீனில் கொட்டிவைக்காதீர்கள்!


ஐந்து

ப்ளே ஸ்டோரில் easy battery saver ,battery doctor,juice defender,2x battery saver என்று அற்புதமான  அப்ளிகேஷன்கள் இருக்கின்றன .அவைகளில் ஒன்றை இன்ஸ்டால் செய்து பாட்டரியின் சார்ஜை நீட்டித்து கொள்ளுங்கள் 

இன்னும் வரும்.....

உங்கள் மாரி.

வெள்ளி, 26 அக்டோபர், 2012

ஆண்ட்ராய்ட் என்றால் என்ன? ஆண்ட்ராய் மொபைல் எப்படி செயல்படுகிறது?

 தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பத்துறையில் மிகவும் முன்னணியில் இருப்பது மொபைல்துறை என்றால் அது மிகையாகாது. காரணம்.. கடந்த பதிவில் சொன்னதைப் போன்றதுதான்.. போட்டி. வாடிக்கையாளர்களை நிறுவனங்கள் போட்டி போட்டு தன்னுடைய தயாரிப்புகளை சந்தையில் விற்பனைக்கு வைக்கின்றன. 

எத்தனையோ வித்தைகளை இணையத்தில் செய்து தற்போது முன்னணயில் இருக்கும் கூகிள் நிறுவனம் தனது மற்றொரு அத்தியாயமாக இந்த ஆன்ட்ராய்ட் எனும் இயங்குதளத்தை உருவாக்கி, அதை மொபைல் பயன்பாட்டுக்கென வெளியிட்டு, தானும் மொபைல் சந்தையில் நுழைந்தது. 

சுருக்கமாக ஆன்ட்ராய்ட் என்பது ஒரு இயங்குதளம். இது தற்போது புதியதாக வெளிவந்திருக்கும் Tablet PC, புதுவித மொபைல் போன்களுக்கான இயங்குதளமாகும். கணினியில் எப்படி OS இயங்குதளம் செயல்படுகிறதோ.. அதைப் போன்றே மொபைல்களுக்கான இயங்குதளமாக ஆன்ட்ராய்ட் செயல்படுகிறது. மொபைல், மற்றும் Tablet PCக்களில் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படுவது ஆன்ட்ராய் இயங்குதளம். 

ஆன்ட்ராய்ட் மார்க்கெட்: 
(Android Market)
ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யப் பயனுள்ள சந்தை இதுவாகும். நாம் காய்கறி மார்க்கெட்டில் காய்கள் வாங்குவதைப்போல Android market - ல் லட்சக்கணக்கான இலவச பயன்பாடுகள் கொட்டி கிடக்கின்றன .சில ஆன்ட்ராய்ட் பயன்பாடுகளை (Android applications)பணம் கொடுத்துப் பெற முடியும். 

சரி.. இந்த ஆன்ட்ராய்ட் இயங்குதளம் எத்தனை பதிப்புகளைக் கண்டிருக்கிறது? அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம். 

1. cupcake (Android 1.5)
2. Donut (Android 1.6)
3. Eclair (Android 2.0/2.1)
4. Gingerbread (Android 2.3)
5. HoneyComb (Android 3.0)
6. Ice Cream Sandwich (Android 4.0)

இப்போது ஜெல்லி பீன் என்ற புதிய பதிப்பு வந்திருக்கிறது.

ஆண்ட்ராய்ட் மொபைலின் சிறப்பம்சங்களை கொஞ்சம் பார்ப்போம்!

1. Mobile-ன் முகப்புப் பக்கத்தை உங்கள் விருப்பப்படி வைத்துக்கொள்ளலாம். அதாவது நமக்குத் தேவையான விட்ஜெட்கள் முகப்பு பக்கத்தில் வைத்துக்கொள்ள முடியும். (Customize home screen)
2. நமக்கு வரும் எஸ்.எம்.எஸ். கள் threaded sms முறையில் இருக்கும். ஒருவர் அனுப்பும் எஸ்.எம்.எஸ் ஆனது தொடர்ந்து சங்கிலி முறையில் இணைக்கப்பட்டிருக்கும். 
3. இதிலுள்ள சிறப்பு பயன் Screenshot தான். மொபைல் திரையில் உள்ளதை கணினியில் screen shot எடுப்பதைப் போன்றே Screen Shot எடுக்கலாம். 
4. மற்றொரு அதிசய அப்ளிகேஷன் வாய்ஸ் ஆக்சன்(Voice Action) ஆகும். இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் வாய்ஸ் மூலமே மொபைலை கையாள முடியும். தமிழுக்கு இது ஏற்றதல்ல. ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு ஏற்ற அப்ளிகேஷன் இது. 
5. பொதுவாக எல்லாம ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் google aps நிறுவப்பட்டிருக்கும்.
6. கணினியில் நாம் பயன்படுத்தும் பிரௌசர் போலவே இதிலுள்ள பிரவௌசர் செயலாற்றுகிறது. You tube video க்களை காண பிளாஷ் வசதி இதில் அடங்கியிருக்கிறது.

இனி வரும் பதிவுகளில் சில முக்கியமான அப்பிளிகேஷன்களையும்,வேகம் அதிகரிக்கவும் ,மெமரியை கூட்டவும் சில டெக்னிக்குகளையும் எழுதலாம் என்று இருக்கிறேன் ..அடுத்த பதிவில் சந்திப்போம் ..

பதிவில் உதவி http://softwareshops.blogspot.in/2012/08/what-is-android-simple-explanation-of.html